விமர்சனம்

அக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்

அக்னி தேவி – நடிகர் பாபி சிம்ஹாவும் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகை மது பாலாவும் இனைந்து நடித்திருக்கும் படம் தான் அக்னி தேவி.படத்தின் கதை, சென்னையில் பட்ட பகலில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறார்,அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா மேலும் அந்த கேஸ் சம்மந்தப்பட்ட இருவர் கொலை செய்யப்படுகிறார்கள்.இந்த கொலைகளுக்கு பின்னால் மிக பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வர ஆதாரங்கள் இல்லாத பாபி சிம்ஹா எப்படி இதை சமாளிக்கிறார் என்பது தான் மீதி கதை.

படத்தின் நாயகன் பாபி சிம்ஹா வழக்கமான நடிப்பு தான்,படத்தில் அவரது குரலும் மாறியுள்ளது.படத்தின் வில்லியாக நடிகை மது பாலா வித்தியாசமான நடிப்பு.நடிகர் சதீஷ் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார்.M.S.பாஸ்கர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.படத்தின் பின்னணி இசை படத்திற்கு தூணாக உள்ளது.படத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்க்கிறது.படம் ஒரு திரில்லர் கதை அனால் படத்தில் விறுவிறுப்பு குறைவாக உள்ளது.படத்தின் இயக்குனர் ஷாம் சூர்யா முதல் படத்தில் சற்று குறைகள் இருந்தாலும் கவனம் ஈர்க்கிறார்.

அக்னி தேவி – அனல் 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close