breaking news New
Test Image

ஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema

ஆண் தேவதை : பல சமூக கருத்துள்ள திரைப்படங்கள் தமிழில் வந்து கொண்டு இருக்கின்றன.அப்படி குடும்ப வாழ்வியல் பிரச்சனையை மையமாக வைத்து வந்துள்ள திரைப்படம் தான் ஆண் தேவதை.படத்தின் நாயகன் சமுத்திரக்கனி நாயகி ரம்யா பாண்டியன் திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு வாழ்கின்றனர்.இரண்டு பேரும் வேளைக்கு செல்வதால் குழந்தைகளை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை.இதனால் சமுத்திரக்கனி மனைவிக்கு விட்டு கொடுத்து வேலையை விட்டு வீட்டில் இருந்து குழைந்தைகளை பார்த்து கொள்கிறார்.ஒரு கட்டத்தில் பண மோகத்தில் தன கணவர் சமுத்திரக்கனியுடன் குடித்து விட்டு வந்து பிரச்சனை செய்கிறார் ரம்யா பாண்டியன் இதனால் விரக்தி அடைத்து தனது குழந்தையுடன் வெளியேறும் சமுத்திரக்கனி என்ன ஆனார்? அவர் மனைவி என்ன ஆனார் என்பது மீதி கதை.

தேவதை பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை ஆணாகவும் இருக்கலாம் என்பது போல் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.படத்தின் நாயகியும் நன்றாகவே நடித்திருக்கிறார்.முக்கியமான கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்திருக்கிறார்.மற்றபடி குழந்தை நட்சத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.படத்தின் ஒளிப்பதிவு மாற்றும் பாடல்கள் ஓகே.இயக்குனர் தாமிரா 8 வருடங்கள் கழித்து ஒரு படத்தை இயக்கிருக்கிறார்.படத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரிசத்தை கூட்டியிருக்கலாம்.மற்றபடி படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.

ஆண் தேவதை : பார்க்க வேண்டிய படம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password