விமர்சனம்

உச்சக்கட்டம் – திரைப்படம் விமர்சனம்

உச்சக்கட்டம் – தமிழ் படங்களின் வில்லன்களை எல்லாம் வைத்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் சுனில் குமார் தேசாய்.படத்தின் கதை,ஒரு போலீஸ் அதிகாரியை கொல்ல திட்டம் போடும் வில்லன் அந்த கொலையை செய்யும்போது அதை மறைந்திருந்து படம் பிடிக்கும் நாயகி தன்ஷிகாவும் ,மீண்டும் தன்ஷிகாவை கொல்ல விரட்டும் வில்லன் கும்பலும் அவர்களிடம் இருந்து தன காதலியை காப்பாற்ற போராடும் நாயகனையும், இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை.

படத்தின் நாயகன் சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் வில்லன் தாகூர் அனுப் சிங்,நல்ல கட்டுக்கோப்பான உடம்புடன் வில்லன்களை துவம்சம் செய்கிறார்.அடுத்து நாயகிகள் தன்ஷிகா மற்றும் தான்யா ஹோப் இருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.வில்லனாக வேதாளம் படத்தின் வில்லன் கபீர் சிங். படத்தில் ஒரு பாடல் மட்டும் இருப்பது பலமாக உள்ளது.படத்தின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் இயக்குனர் காட்சியமைப்பை விறுவிறுப்பாக அமைத்தததற்கு அவரை பாராட்டலாம்.மற்றபடி படத்தில் பெரிய சுவாரசியம் இல்லை என்பது மைனஸ்.

உச்சக்கட்டம் – பதற்றம் குறைவு 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close