breaking news New
Test Image

எங்க காட்டுல மழை திரைப்படம் விமர்சனம்

எங்க காட்டுல மழை : குள்ளநரி கூட்டம் படத்தின் இயக்குனர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் தன் எங்க காட்டுல மழை. ஹீரோ மிதுன் மகேஸ்வரன் வேலையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார்.அவருக்கு ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்னன் பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார்.அவரின் நண்பராக அப்புக்குட்டி ஒரு இடிந்த கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார். அப்பொழுது வெளிநாட்டு டாலர் பணத்தை கைமாற்றும் கும்பலிடம் இருந்து போலீஸ் அதிகாரி அருள்தாஸ் அந்த பணத்தை அபேஸ் செய்கிறார். அவரிடம் இருந்து அந்த பையை அடிக்கும் ஹீரோ அதிலிருக்கும் பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்கிறார். மீதி பணத்தை அந்த கட்டிடத்தில் மறைத்து வைக்கிறார்கள் ஹீரோவும் அவரது நண்பர் அப்புகுட்டியும். திரும்பி வந்து பார்க்கும் போது அந்த இடத்தில போலீஸ் நிலையம் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். பின்பு அவர்கள் அந்த பணத்தை எடுத்தார்களா இல்லையா என்பது தன் கதை.

படத்தின் நாயகன் மிதுன் மகேஸ்வரன் தனக்கு இரண்டாவது படம் தன் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சி காட்டியிருக்கிறார்.நாயகி சுருதி ராமக்ரிஷ்னன் அழகாக இருக்கிறார் மற்றும் நடிக்கவும் செய்கிறார.அப்புக்குட்டி காமெடி கைகொடுத்து இருக்கிறது. படத்தின் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது.படத்தின் மற்றோரு தூண் என்று படத்தின் வசனங்களை சொல்லலாம்.படத்தின் இயக்குனர் ஒரு காதல் காமெடி படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்து அதில் வெற்றியும் பெறுகிறார்.

எங்க காட்டுல மழை : காமெடி பரவசம்

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password