breaking news New
Test Image

எச்சரிக்கை திரைப்படம் விமர்சனம்

எச்சரிக்கை : யூடூப்பில் சில குறும்படங்கள் இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் சார்ஜுன் இயக்கியிருக்கும் முழு நீள திரைப்படம்.சிறுவயதில் தன அக்காவை கொன்ற மாமாவை கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார் கிஷோர். பின்பு 15 வருடங்கள் கழித்து வெளியே வந்தவுடன் தான் அனாதையாக விட்டு சென்ற அக்கா மகனை சென்று பார்க்கிறார்.பின்பு இருவரும் சேர்ந்து பணக்காரரின் மகளான வரலட்சுமி சரத்குமாரை கடத்துகிறார்கள்.அவளை வைத்து பெரிய தொகையை பிணையமாக கேட்கிறார்கள்.அந்த பணக்காரர் ஓய்வு பெட்ரா போலீஸ் அதிகாரியான சத்யராஜின் உதவியை நாடுகிறார்.இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே படத்தின் கதை.அந்த பணத்தால் யாருக்கு நன்மை நடந்தது என்பது மீதி கதை.

படத்தில் கிஷோர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் தங்களின் அனுபவ நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள்.வரலக்ஷ்மி சரத்குமார் கதாபாத்திரமும் கச்சிதம்.படத்தின் கதை இவர்களை சுற்றியே நடப்பதால் வேறு கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை.காமெடியகு யோகிபாபு இருக்கிறார் ஆனால் அந்த அளவுக்கு நகைச்சுவை இல்லை.படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பிளஸ்.படம் திரில்லர் படம் என்பதால் இயக்குனர் முடிந்த அளவுக்கு சுவாரிசயமாக கொடுத்திருக்கிறார். படத்தின் இறுதி காட்சி படத்தின் பலம்.
எச்சரிக்கை : தரம்

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password