breaking news New
Test Image

கடைக்குட்டி சிங்கம் திரைவிமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் : தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஆபாச படங்களும்,பேய் படங்களும் மட்டுமே ஓடும் என்ற நம்பிக்கையில் நிறைய படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.அப்படி வந்தாலும் குடும்ப படங்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் கடைக்குட்டி சிங்கம் குடும்பத்தோடு முகம் சுழிக்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.படத்தின் கதை புதுக்கோட்டையில் நடக்கிறது.படத்தில் சத்யராஜின் மகனாகவும் ஐந்து அக்காக்களின் தம்பியாகவும் வருகிறார் கார்த்தி.அவருக்கு இரண்டு முறை பெண்கள் இருக்க அவரோ தன்னுடைய பார்வையை வேறு பெண்ணான சாயியேஷா பக்கம் திருப்புகிறார்.இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் பிரிவுகளும் தான் படத்தின் கதை.

படம் முழுக்க ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம்.நடிகர் கார்த்தி அவர்களுள் தனித்துவமாக ஸ்கோர் செய்கிறார்.படத்தில் அவர் விவசாயத்தை பற்றி பேசும் வசனங்களுக்கு தேட்டரில் விசில் பறக்கிறது.படத்தில் சத்யராஜ்,பானு பிரியா மற்றும் விஜி சந்திரசேகர் ஆகிய மூன்று சீனியர் நடிகர்களும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். படத்தில் மூன்று கதாநாயகிகள் மூன்று பேரும் தங்களுடைய கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.காமெடிக்கு சூரி கைகொடுக்கிறார்.படத்தின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரோட்டம் தருகிறது.படத்தின் மிகப்பெரிய பிளஸ் படத்தின் வசனங்கள் தான்.அதுபோல குடும்ப உறவுகளை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.மொத்தத்தில் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான படம் கடைக்குட்டி சிங்கம்.

கடைக்குட்டி சிங்கம் : குடும்ப படம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password