breaking news New
Test Image

களரி திரைப்படம் விமர்சனம்

களரி : களரி என்று பெயர் வெய்துருக்கிறார்களே இது சண்டை படம் என்று எண்ணி விட வேண்டாம் இது ஒரு அழகான குடும்ப உருவை சொல்லும் படம்.படத்தின் கதை மிகவும் பயந்த சுபாவம் உடைய கிருஷ்ணா கேரளாவில் உள்ள தமிழ் நகரமான வாதுருத்தியில் வசிக்கிறார். தன தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டதால் அவளுக்காக பலரிடம் ஆதி வாங்குகிறார் மற்றும் கெஞ்சுகிறார். கிருஷ்ணாவின் தந்தை ம்.ஸ் பாஸ்கர் குடிகாரனாகவும் குடுமபத்தை சீரழிப்பவராக வருகிறார். இந்நிலையில் தங்கை ஒரு மோசக்காரனின் காதல் வலையில் விழுகிறார். அவளுக்கு நல்ல இடத்தில மாப்பிளை பார்த்து கொண்டு இருக்கும் கிருஷ்ணாவுக்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் அவர் என்ன செய்தார் ? அவரின் தங்கை வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதி கதை.

படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா பயந்த சுபாவம் கொண்டவராக தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.படத்தின் நாயகி வித்யா பிரதீப் இவர் படத்தில் ஏன் இருக்கிறார் என புரியவில்லை. m.s.பாஸ்கர் படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இவருடன் ஜெயப்ரகாஷும் வில்லனாக இருக்கிறார்.படத்தின் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் குருதேவ் அளவான ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இயக்குனர் தான் சொல்ல வந்த விஷயத்தை கதையின் சுவாரசியம் குறையாதவாறு சொல்லி இருக்கிறார். படத்தில் உள்ள சில குறைகளை தவிர்த்தல் நல்ல படமாகவே தெரிகிறது.

களரி : காணலாம் 

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password