breaking news New
Test Image

காட்டு பய சார் இந்த காளி திரைப்படம் விமர்சனம்

காட்டு பய சார் இந்த காளி : இயக்குனர் யுரேகா இயக்கி நடிகர் ஜெய்வந் நடித்து தயாரித்து இருக்கும் திரைப்படம்.படத்தின் கதை சென்னையில் தொடங்குகிறது. ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களின் வாகனங்கள் வரிசையாக இரவு நேரங்களில் மர்ம நபரால் தீ வைத்து கொழுத்த படுகிறது.இதை யார் செய்கிறார் என புரியாமல் அந்த நிறுவனமும் போலீசும் திணறுகிறது.அந்த நபரை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ஜெய்வந் நியமிக்கிறது காவல் துறை.அவரும் அந்த நபர் யார் என்று தெரியாமல் குழம்பி போகிறார். பின்பு அந்த மேலும் பல வாகனங்களை கொளுத்த விஷயம் பெரிய அளவில் செல்கிறது. அந்த நபர் யார் அவர் எதற்கு இதெல்லாம் செய்கிறார் என்பதை படத்தின் இறுதி காட்சி விளக்குகிறது.

படத்தின் நாயகன் ஜெய்வந்த் பார்க்க உண்மையான போலீஸ் அதிகாரி போல் படத்தில் மிளிர்கிறார். அதே மிடுக்குடன் இருக்கிறார். படத்தின் நாயகியின் கதாபாத்திரம் உண்மையில் கதையில் திருப்புமுனையாக உள்ளது.மற்றபடி படத்தில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை.படத்தில் காமெடியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.படத்தின் வசனங்கள் ஆங்காங்கே கைதட்ட வைக்கிறத. படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சபாஷ் ரகம் . படத்தின் இயக்குனர் யுரேகா நல்ல கதை கையில் எடுத்து அதை திரைக்கதையில் சற்று தொய்வு செய்து விட்டார் மற்றபடி படம் அருமையாக உள்ளது.

காட்டு பய சார் இந்த காளி : பார்க்கலாம் 

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password