breaking news New
Test Image

காத்திருப்போர் பட்டியல் திரைப்படம் விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை நந்திதா நடித்திருக்கும் ஒரு காதல் காமெடி படம்.படத்தின் கதை ரயில்வே போலீஸையும் அவர்களின் வாழ்க்கை முறையை பின்புலமாக வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.ஹீரோ சச்சின் மணி நந்திதா மீது காதல் கொள்கிறார். நந்திதாவும் அவரை காதலிக்கிறார். ஆனால் அவர்களின் காதலுக்கு ஹீரோ வேலையில்லாமல் சுற்றி திரிவது பிரச்சனை ஆகிறது. இதனால் நந்திதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த செல்லும் ஹீரோ ரயில்வே போலீசிடம் மாட்டி கொள்கிறார். பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை.

ஹீரோவாக சச்சின் மணி அறிமுகம் ஆகியிருக்கிறார். நடிப்பில் நேர்த்தி தெரிகிறது. ஹீரோயின் நந்திதா தெத்து பள்ளழகியக ப்ளீச்சிடுகிறார்.நடிப்பிலும் அசத்துகிறார். ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கூட்டாளிகளாக வரும் சென்ராயன், அப்பு குட்டி, மயில்சாமி மற்றும் அருள் தாஸ் பட்டாளம் காமெடி பொறுப்பை ஏற்று சிறப்பாக செய்து இருக்கிறார்கள். குறிப்பாக வண்டியிலிருந்து தப்பிக்கும் காட்சி உதாரணம். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் படம் நேர்த்தி.காதல் காமெடி படம் என்பதால் படம் ரசிக்கும் படி இருக்கிறது.

காத்திருப்போர் பட்டியல் : காத்திருந்து பார்க்கலாம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password