விமர்சனம்

குடிமகன் – திரைப்படம் விமர்சனம்

குடிமகன் – நாட்டில் உள்ள பல குடிமகன்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாகவே இந்த குடிமகன் படம் வெளிவந்துள்ளது.படத்தின் கதை,தன்னுடைய ஊரில் தன் மனைவி மற்றும் தன பையன் ஆகியோரிடம் மகிழ்ச்சியாக வாழும் நாயகன் ஜெய்குமார்.ஒரு கட்டத்தில் தன் நண்பர்களின் வற்புறுத்தலால் மது பழக்கம் ஏற்பட அந்த மது பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார் நாயகன்.இதனால் மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகிறது அந்த குடும்பம்.அவர் மது பழக்கத்திலிருந்து விடுபட்டாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

படத்தின் நாயகன் ஜெயகுமார் புதுமுகமாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.நாயகி ஜெனிஃபர் கதைக்கு பொருத்தமாக அமைந்துள்ளார்.மாஸ்டர் ஆகாஷ் அவர்களின் நடிப்பும் அவரது இறுதி காட்சியும் படத்திற்கு பலம்.படத்தின் இசை சுமார் ரகம்.மற்றபடி படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல தேர்வு.படத்தின் இயக்குனர் சதீஸ்வரன் மது பழக்கத்தால் அடிமையாகி தன வாழ்க்கையை தொலைத்து தன குடும்பத்தையும் கெடுக்கும் குடிமகன்களுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்.சில குறைகள் இருந்தாலும் சொல்ல படும் விஷயத்திற்கு பாராட்டலாம் .

குடிமகன் – குடிமகன்கள் அவசியம் பார்க்கவும்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close