breaking news New
Test Image

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வீடியோவில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பரவலாக காணப்படும் பரஸ்பர அன்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அவர்கள் அவரை நடிகரையும் தாண்டி தங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார்கள். இல்லையென்றால், பேசவே ஆரம்பிக்காத குழந்தைகள் கூட அவருக்கு தங்கள் அன்பை முத்தம் மற்றும் அரவணைப்பால் எப்படி வழங்க முடியும். அந்த கள்ளம், கபடமற்ற அன்புக்கு கைமாறாக, குழந்தைகளை மோசமாக பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஊக்கப்படுத்த மாட்டேன் என உறுதி அளித்திருக்கிறார். இதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், தற்போதைய சமூகத்தின் முக்கிய தேவையான “குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை” தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்திருக்கிறார்.

Chisel அமைப்பின் நிறுவனர் அரசி அருள் மற்றும் PEACE (NGO) அமைப்பின் நிறுவனர் ராகிணி முரளிதரன் ஆகியோர் திருமதி ஆர்த்தி சிவகார்த்திகேயனை சந்தித்து இதை பற்றி வேண்டுகோளை விடுத்தனர். “இது தான் அவர் எப்போதும் குழந்தைகளுக்கு செய்ய விரும்பிய விஷயம், அவர் நிச்சயம் செய்வார்” என்று உறுதி அளித்தார் ஆர்த்தி.

இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப குழுவினர், நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்தனர். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார், மேலும், “ஒரு நடிகன் மற்றும் அப்பாவாக எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த முயற்சியில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

இந்த வீடியோவில் நடிக்க சிவா தான் அவர்களின் முதல் மற்றும் ஒரே விருப்பம். ஏனெனில் அவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர். அவர் ஒரு விழிப்புணர்வு வீடியோவில் நடிக்கும் போது அது அவர்களை எளிதில் சென்றடையும். விவாதங்கள், படப்பிடிப்பு, டப்பிங் என அனைத்து நிலைகளிலும் சிவா அவரது முழு ஒத்துழைப்பை வழங்கினார். அது அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது என்கிறார்கள் குழுவினர்.

இந்த வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. இது குழந்தைகள் மீதான தொடுதலில் உள்ள வகைகள், உடல் பாகங்கள், பாதுகாப்பு எல்லைகள், யாரை நம்ப வேண்டும் போன்ற முக்கியமான தலைப்புகளை பற்றி மென்மையான முறையில் பேசுகிறது. இந்த விழிப்புணர்வு வீடியோவை திரையரங்குகளில் ஒளிபரப்பவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த வீடியோவை பார்த்த பிறகு ஒரு குழந்தை அவரை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றாலும், நாங்கள் ஒரு குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ததாக, எங்கள் நோக்கம் நிறைவேறியதாக எண்ணிக் கொள்வோம்.

இந்த சமூக விழிப்புணர்வு வீடியோவை சாம் சிஎஸ் இசையில், ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் இயக்குனர் திரு இயக்கியிருக்கிறார். ரூபன் (எடிட்டிங்) மற்றும் உமேஷ் ஜே குமார் (கலை) ஆகியோருடன் சி ஆனந்த பத்மநாபன் புரொடக்‌ஷன் கண்ட்ரோலராக பணி புரிந்திருக்கிறார். சுரேஷ் கிளாசிக் கிச்சன் படப்பிடிப்புக்கு தேவையான by இடத்தை வழங்கியிருக்கிறது. குழந்தைகளின் நல்வாழ்விற்கான இந்த முன்முயற்சியை ஆதரித்து, பூர்வீகா மொபைல்ஸ் முதுகெலும்பாக திகழ்கிறது.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password