breaking news New
Test Image

கோலிசோடா 2 திரைவிமர்சனம்

கோலிசோடா 2 : கோலிசோடா முதல் பாகத்தை போலவே அதன் இரண்டாம் பாகமும் சூடு மற்றும் வேகம் குறையாமல் எடுத்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன் .படத்தின் மைய கதை மூன்று இளைஞர்களை சுற்றி நடக்கிறது,அந்த மூன்று பேரையும் இணைக்கும் புள்ளியாக சமுத்திரகனி வருகிறார்.அவர் தான் படத்தின் தூண் என்றே சொல்லலாம்.அந்த மூன்று பேரும் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு விதமாக பிரச்சனைகளை சந்திகிறார்கள்.அவர்களை மட்டம் தட்டும் அந்த வில்லன்களை அவர்கள் மூவரும் இனைந்து எப்படி எதிர்கிறார்கள் என்பது படத்தின் மையக்கதை.

படத்தின் ஹீரோக்களாக மூன்று பேர் நடித்துள்ளனர் மூன்று பேருமே நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.படத்தின் நாயகிகளாக சுபிக்ஷா மற்றும் கிரிஷா குரூப் நடித்துள்ளனர். இருவரும் மாறி மாறி காதல் காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார்கள்.படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் கவுதம் மேனன்.படத்தில் ரோகினி மற்றும் ரேக்ஹா தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர் .படத்தின் நிஜ ஹீரோ சமுத்திரகனி என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு படத்தை தன தோளில்சுமந்துள்ளார்.படதிப்ன் பின்னணி இசை பெரிய பலமாக உள்ளது. படத்தின் இயக்கம் மற்றும் ஒளிபதிவு இரண்டும் விஜய் மில்டன் என்பதால் தேவைக்கேற்ற காட்சிகள் உள்ளது .படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட கொஞ்சம் தடுமாற்றத்துடன் உள்ளது.வசனங்கள் அருமை .

கோலிசோடா 2 : ஒரு முறை ரசிக்கலாம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password