விமர்சனம்

க்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்

க்ரிஷ்ணம் – இது உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட உயிரோட்டமுள்ள படம் என்றே கூறலாம்.படத்தின் நாயகன் துறுதுறு இளைஞர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்.நல்ல குணம் படைத்த இளைஞராக வளர்கிறார்,அவரது தந்தை அவனுக்கு முழு பக்க பலமாய் இருக்கிறார்.காதலும் அவருக்கு தோன்றுகிறது அதை வெளிப்படுத்தி வெற்றியும் அடைகிறார்,திடீரென ஒரு நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுகிறார்.அவரை பரிசோதிக்கும் மருத்துவர்கள் இவருக்கு அரிய வகை நோய் இருக்கிறது பிழைப்பது கடினம் என்று கூறுகிறார்கள்.பின்பு தனது மகனின் உயிருக்காக போராடுகிறார் தந்தை.நாயகன் பிழைத்தாரா இல்லையா என்பதை உயிரோட்டமாக சொல்லி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக நடித்திருப்பவர் தான் உண்மையிலேயே அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்.அவருடைய கதையை தான் அவரின் தந்தை தயாரித்து இந்த உலகத்துக்கு சொல்ல முயன்றுகிறார். டப்பிங் படம் தான் என்றாலும் அது தெரியாதவாறு வசனங்கள் உள்ளது பலம்.படம் சற்று திசை மாறினாலும் முழு நீள ஆன்மிக படமாகி இருக்கும் அதை அவ்வாறு கொண்டு செல்லாமல் நேர்த்தியாக இயக்கிருக்கிறார் இயக்குனர்.

க்ரிஷ்ணம் – உண்மை பதிவு 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close