breaking news New
Test Image

செய் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema

செய் : நடிகர் நகுலின் நடிப்பில் ரொம்ப நாள் கழித்து வெளி வந்திருக்கும் திரைப்படம் செய்.ரீல் ஹீரோவாக துடிக்கும் நகுல் ரியல் லைப் ஹீரோவாக மாறுவதே படத்தின் கதை. ஒரு மிக பெரிய குற்றச்சாட்டில் சிக்கி மக்களால் அவமானப்பட்டு கொல்லப்படுகிறார் அமைச்சர் தலைவாசல் விஜய்.அந்த இறப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்மங்களை ஒவ்வென்றாக முடிச்சு அவிழ்க்கிறார் இயக்குனர்.இந்த வலைக்குள் சிக்கி கொள்ளும் நகுல் அந்த வலையில் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதே மீதி கதை.

படத்தின் நாயகன் துறுதுறு நடிப்பில் கலக்குகிறார் நடிகர் நகுல்.அனால் அது சில இடங்களில் நன்றாக இருந்தாலும் சில இடங்களில் நன்றாக இல்லை.படத்தின் நாயகி ஏஞ்சல் அழகாக இருக்கிறார்.படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்.மற்றபடி படத்தின் கதாபாத்திரங்கள் நன்றாக உள்ளது.படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது இசையும் ஒளிப்பதிவும்.படத்தின் இயக்குனர் திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுக்க கடுமையாக முயற்சி செய்திருக்கிறார்.ஆனால அந்த விறுவிறுப்பு முதல் பாதியில் எடுபடவில்லை.மற்றபடி படத்தின் கதை நன்றாக உள்ளது.

செய் : ஒரு முறை பார்க்கலாம் 

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password