breaking news New
Test Image

ஜீனியஸ் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema

ஜீனியஸ் : தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை இயக்கும் சுசீந்திரன் இயக்கியிருக்கும் எதார்த்தம் கலந்த விழிப்புணர்வு படம் இந்த ஜீனியஸ். படத்தின் நாயகன் ரோஷன் சிறுவயதில் இருந்தே படிப்பில் கெட்டிசாலியாகவும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வளர்கிறார்.ஒரு கிட்டத்தில் அவரது தந்தை ரோஷனை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும்படி வளர்க்கிறார்.இதனால் அவன் வளர்ந்த பிறகு அவனுக்கு எதார்த்த வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் வேலை பலுவின் காரணமாக மூளை செயலப்பாட்டில் பாதிப்பு ஏற்படுகிறது.இதன் பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறியது என்பது தான் மீதி கதை.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரோஷன் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததை பாராட்டலாம.இனிமேல் அவர் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று நம்பலாம்.படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக ஆடுகளம் நரேனை சொல்லலாம்.மற்றபடி படத்தில் யுவனின் பாடல்களும் குருதேவின் ஒளிப்பதிவும் பாராட்டவேண்டிய விஷயம்.படத்தின் நீளமும் குறைவு என்பதால் படம் இன்னும் சுவாரசியமாக உள்ளது.இயக்குனர் சுசீந்திரன் கதையில் செய்த வித்தையை திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் படம் மிக சிறப்பாக வந்திருக்கும்.

ஜீனியஸ் : பார்க்க கூடிய படம் தான்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password