breaking news New
Test Image

டிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்

டிக் டிக் டிக் : இந்தியாவில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி திரைப்படம் டிக் டிக் டிக்.முதலில் இந்த மாதிரியான சவாலான விஷயத்தை தொட்டதுகே இந்த படக்குழுவினரை மனதார பாராட்டலாம்.படத்தின் கதை என்னவென்றால் சென்னையில் ஒரு விண்கல் வந்து மோதுகிறது.இதை ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் ஒரு விண்கல் வந்து தாக்கும்எனவும் அது நான்கு கோடி மக்கள் அழிவுக்கு காரணமாக இருக்கும் எனவும் கண்டுபிடிகிரார்கள்.அந்த விண்கல்லை விண்வெளியிலேயே அழிக்க திட்டம் போடுகிறார்கள்.அதை ஜெயம் ரவி உட்பட ஒரு குழுவை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள்.அப்படி செல்லும் அந்த குழுவுக்கு விண்வெளியில் என்ன ஆபத்து ஏற்பட்டது? அவர்கள் அந்த விண்கல்லை அழித்தார்களா இல்லையா ? என்பது தான் கதை.

படத்தின் நாயகன் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ் உடன் இனைந்து நடித்திருக்கிறார்.படத்தில் இருவருமே கவனம் ஈர்கிறார்கள்.குறிப்பாக ஜெயம் ரவி விண்வெளியில் போராடும் காட்சிகள் திக் திக் நிமிடங்கள்.நிவேதா பெதுராஜ் கவர்ச்சியாகவும் அதேசமயம் நடிப்பிலும் அசத்துகிறார்.வின்சென்ட் அசோகனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் அமைந்துள்ளது.ரமேஷ் திலக் மற்றும் அர்ஜுனன் காமெடி பண்ண முயற்சிதிருகிறார்கள்.படத்தின் பின்னணி இசையும் மாற்றும் குறும்பா பாடலும் டி.இமானின் பெயரை நிலைநிறுத்துகிறது.படத்தின் ஒளிபதிவும் எடிட்டிங்கும் கச்சிதமாக உள்ளது.படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் தன கனவை திரையில் vfx உதவியுடன் பிரமாதமாக வெளிபடுதியிருகிறார்.

டிக் டிக் டிக் : கண்டிப்பாக பார்க்கவும் 

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password