அரசியல்

டி,டி,வி,தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார்

ஆர்.கே,நகரில் பேச்சு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி.வி.தினகரன், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, கண்ணகி நகரில் நடந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஆர்.கே.நகரில் எனது வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை மக்கள் தொடங்கி உள்ளனர். அண்ணா தி.மு.க.வை தொடங்கியபோது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான் தனது அத்தியாயத்தை தொடங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து 3-வது அத்தியாயத்தை ஆர்.கே.நகர் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள். நான் புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு 3 பெயர்களை பரிசீலிக்க தேர்தல் கமிஷனில் கொடுத்து இருக்கிறோம். அதில் இன்று(அதாவது நேற்று) தேர்தல் கமிஷன் முடிவு எடுப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்சி பெயர் பற்றி தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும். கட்சியின் பெயரை ஆர்.கே.நகர் தொகுதியில் வைத்து அறிவிப்பேன். அதன் தொடக்க விழாவும் இங்குதான் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
\

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close