breaking news New
Test Image

தமிழ் படம் 2 திரை விமர்சனம்

தமிழ் படம் 2 : பல படங்களை கலாய்த்து எடுக்கப்பட்ட தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் இந்த படம்.முதல் படத்தை போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட திரைப்படங்களை கலாய்த்து தள்ளியிருக்கிறார்கல் .படத்தின் கதை என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம்.படம் முழுக்க நகைச்சுவையோடு தர வேண்டும் என்ற முழு நோக்கத்தோடு எடுத்திருக்கிறார்கள்.படத்தின் பெரிய பலமாக காமெடி இருக்கிறது.போலீஸ் அதிகாரியான சிவா தீவிரவாதியான சதீஷை எப்படி பிடிக்கிறார் என்பது தான் கதை.அதற்குள் பல்வேறு படங்களின் காட்சிகளை இவர்கள் பாணியில் கலாய்த்திருக்கிறார்கள் .

படத்தின் அகில உலக சூப்பர்ஸ்டார் ஆகா மிர்ச்சி சிவா அதகளம் செய்கிறார்.படத்தில் அவர் வரும் காட்சிகளுக்கு எல்லாம் விசில் பறக்கிறது.நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.அழகில் அனைவரையும் மயக்குகிறார்.வில்லனாக சதிஷ் நடித்துள்ளார்.மனோபாலா,r .சுந்தர்ராஜன் மற்றும் சந்தான பாரதி நடித்துள்ளனர்.படத்தின் தொழில்நுட்ப குழு தன வேலையை சிறப்பாக செய்திருக்கிறது.படத்தின் இயக்குனர் சி.சி.அமுதன் தன்னுடைய திறமையை இந்த படத்திலும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.குறிப்பாக படத்தின் முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைத்து கொண்டே இருக்கிறார்.

தமிழ் படம் 2 : காமெடி களம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password