breaking news New
Test Image

தொடர திரைப்படம் விமர்சனம்

தொடர : நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்திவிராஜன் கதாநாயகனாக நடித்திருக்கும் மற்றுமொரு காதல் படம் தொடர.படத்தின் கதைப்படி நாயகன் ஊரில் படித்துக்கொண்டே பேப்பர் போடும் வேலை செய்து வருகிறார்.அப்படி பேப்பர் போடும்போது நாயகியை சந்திக்கிறார்.பார்த்ததும் காதலில் விழுகிறார் நாயகன் பின்பு இவர்கள் காதலுக்கு நாயகியின் அண்ணன் எதிர்க்கிறார்.நாயகனை அடித்து உதைக்கிறார்.பின்பு நாயகன் உதவி கேட்டு பழனிக்கு சென்று அங்கு காதலர்களுக்கு பணத்திற்கு ஆசைப்பட்டு உதவி செய்யும் எ.வெங்கடேஷிடம் உதவி கேட்கிறார்.பின்பு அவர்கள் காதல் என்ன ஆனது அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.

படத்தின் நாயகனாக பிரிதிவிராஜ் தனது முழு முயற்சி அளித்திருக்கிறார்.மற்றபடி நாயகி மட்டுமே மனதை கொள்ளை கொள்கிறார் அவருக்கு நல்ல எதிர்காலம் தமிழில் இருக்கிறது என நம்பலாம்.படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகம் இருந்தாலும் மனதில் பதிகிறார்கள். குறிப்பாக நாயகியின் அண்ணனாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருக்கிறார்.படத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.பாடல்கள் அனைத்தும் சற்று பின்னடைவு.படத்தின் கதையும் களமும் மிக பழையது என்றாலும் திரைக்கதையில் சற்று வித்தியாசம் காட்டுகிறார்.சாதி கொடுமையை பற்றி பேசுகிறது படம்.

தொடர : அதே பழைய கதை தான்

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password