breaking news New
Test Image

நோட்டா திரைப்படம் விமர்சனம் – Fulloncinema

நோட்டா : தமிழ்நாட்டின் தற்போதய அரசியல் சூழ்நிலையை மையமாக கொண்டு கற்பனை கதையாக வந்திருக்கும் அரசியல் படம் தான் நோட்டா.படத்தின் கதைப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் நாசர் ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு தன் மகன் விஜய் தேவாரகொண்ட வை சில நாட்களுக்கு முதலைமைச்சர் ஆகிறார்.முதல் சில நாட்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல் இருக்கும் விஜய் பின்பு அந்த பதவியை எப்படி ஒரு ஆயுதமாக மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.இதில் தமிழ்நாட்டில் நடந்த நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வகளை கதையோடு பொருந்தி போகுமாறு செய்திருக்கிறார் இயக்குனர்.

விஜய் தேவாரகொண்ட தமிழில் இது தான் முதல் படம் என்றாலும் அது தெரியாதவாறு நடித்திருக்கிறார்.படத்தின் கதை இவரை சுற்றியே நடக்கிறது என்பதால் படத்தின் பரபரப்பை தன நடிப்பின் மூலம் குறையாமல் பார்த்து கொள்கிறார்.படத்தின் தூண்களாக நாசர்,சத்யராஜ் மற்றும் m.s.பாஸ்கர் நடித்துள்ளனர்.படத்தின் நாயகிகளுக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை.படத்தின் பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.சாம் சி ஸ் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.படத்தின் ஒளிப்பதிவும்,எடிட்டிங்கும் ஓகே.மற்றபடி படத்தை இன்னும் சுவாரஸ்யமாகவும் இன்னும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்று இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நோட்டா : ஒட்டு போடலாம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password