சினிமா செய்திகள்

புதுமுக நடிகரின் அவதார வேட்டை தொடங்கியது!

சமூகத்தில் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் தடுக்க முடியாத குற்றங்களில் குழந்தை கடத்தலை கருவாக கொண்டு விறுவிறுப்பாக திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன். இவர் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அவதார வேட்டை கதை கற்பனையில்ல, ஓர் உண்மை சம்பவம்.

இப்பொழுதெல்லாம் குழந்தையை கடத்துவது சாதரணமாகிவிட்டது. தெருவிலோ, ரோட்டிலோ தனியா இருக்குற குழைந்தைகளை கடத்துவதை தான் பேப்பர்களில் படித்திருக்கிறோம். இந்த உண்மை சம்பவ திருடனுங்க எப்படி குழந்தையை கடத்திருக்காங்கன்னா, ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்,

வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை தெரிந்துக்கொள்ள குறியீடு வைத்து குழந்தையை திருடுகிறார்கள். இப்படி திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை எப்படி ஹீரோ கண்டுப்பிடிக்கிறார் என்பதை காதல், ஆக்ஷனுடன் த்ரிலிங்காகவும் அவதார வேட்டை இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்.

ஹீரோவாக V.R.விநாயக் நடிக்க, அவரின் காதலியாக மீரா நாயர் நடிக்கிறார். ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்;கதை, திரைக்கதை, இயக்கம். ஸ்டார் குஞ்சுமோன்,வசனம் சரவணன்ஔிப்பதிவு – A.காசி விஷவா, இசை – மைக்கேல், படத்தொகுப்பு – கேசவன் சாரி ,மக்கள் தொடர்பு: P. கோபிநாதன் ,பாடல்கள் – V.B.காவியன் நடனம் – அசோக் ராஜா, ராதிகாஆக்ஷன் – S.R.முருகன்கலை – பத்துநிர்வாக தயாரிப்பு – கந்தவேலதயாரிப்பு – ஸ்டார் குஞ்சுமோன் படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஊட்டி மற்றும் மதுரையில் நடைப்பெற்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close