breaking news New
Test Image

மணியார் குடும்பம் திரைப்படம் விமர்சனம்

மணியார் ம் : நடிகர் தம்பி ராமையா தனது மகனை நடிக வைத்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் மணியார் குடும்பம். ஊரில் பரம்பரை பரம்பரையாக பெரிய குடும்பமாக திகழ்கிறது தம்பி ராமையா குடும்பம்.அனால் தம்பி ராமையா வேலை வெட்டி எதுவும் போகாமல் சூதாட்டம் ஆடி கொண்டு திரிகிறார்.அவரது மகனும் ஊர் சுற்றுகிறார் மற்றும் தனது அதை மகளை காதலித்து வருகிறார்.அனால் தனது மகளை காதலிப்பது ஜெயப்ரகாஷ் பிடிக்கவில்லை.தனது மகளுக்கு பல மாப்பிள்ளை பார்க்கிறார்.அனால் அதை எல்லாம் தட்டி கழிக்கிறார் நாயகி.ஒரு கட்டத்தில் ஊர் பணம் 1 கோடி ரூபாயை தொலைத்து விடுகிறார் நாயகன் பின் அந்த பணம் திரும்ப கிடைக்கும் வரை மணியார் குடும்பத்தை ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள். இதனால் இழந்த பணத்தை மீட்க போராடும் நாயகன் அந்த பணத்தை மீட்டாரா இல்லையா என்பது மீதி கத.

நாயகன் உமாபதி படத்தின் நாயகனாக அசதி இருக்கிறார். நடனமும் நன்றாக ஆடுகிறார்.தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக அணைத்து தகுதிகளும் உள்ளது.நாயகியாக மிருதுளா முரளி நடிப்பில் தேறுகிறார்.படத்தின் தூணாக தம்பி ராமையா நடிப்பில் அதனை முதிர்ச்சி தெரிகிறது.படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் பதியும்படி எடுத்திருக்கிரறார்கள்.படத்தின் இசை தம்பி ராமையா வே செய்திருக்கிறார்.பாடல் வரிகளும் அவரே எழுதியிருக்கிறார்.படத்தின் இயக்குனரும் தம்பி ராமையா தான்.படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவற்றை தவிர்த்து பார்த்தால் ஒரு நல்ல குடும்ப படமாக இருக்கும் இந்த படம்.

மணியார் குடும்பம் : குடும்ப படம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password