breaking news New
Test Image

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” திரைப்படம் விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன : தயாரிப்பாளரின் மகனே ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம். மற்ற திரைப்படங்களிருந்து தனித்து நிற்கிறது காரணம் இந்த படம் உணர்த்தும் பாடம். படத்தின் கதை நகைப்பறிப்பு குற்றவாளிகளை நகைபறிப்பால் பாதிக்கப்பட்ட இளைஞரை வைத்து புடிக்க போலீஸ் போடும் திட்டமே இந்த படத்தின் மையக்கரு. நகைபரிப்பிற்கு பின் செயல்படும் குற்றங்களையும் அந்த நெட்ஒர்க் எப்படி வேலைசெய்கிறது என்பதையும் உணர்த்தும் திரைப்படம். படத்தின் இறுதி காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் துருவா படத்தின் நாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக தெரிகிறார். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் இரண்டு நாயகிகள் ஐஸ்வர்யா தத்தாவைவிட இரண்டாவது நாயாகி ஸ்க்கோர் செய்கிறார். சரண்யா பொன்வண்ணன் சேலை காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் நேர்த்தி. படத்தின் இயக்குநர் தான் சொல்லவந்த கருத்தை படத்தில் சில குறைகள் இருந்தாலும் படத்தின் ஓட்டத்தில் தெரியாதவாறு கையாண்டுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன: கண்டிப்பாக பார்க்கலாம்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password