செய்திகள்

மீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார்

எஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான எவனும் புத்தனில்லை படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் பேசியதாவது.,..

இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ?

இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம். ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும். அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லிங்கே விடுபட்டு போகும். இது போல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்புக் ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும் அடித்தும் விடுவேன்…அதற்கு பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள். என் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த் கமல் விஜய்காந்த் கார்த்திக் எல்லோருமே கட்சி ஆரம்பித்து விட்டார்கள்..எனக்கு அப்படி ஒரு ராசியோ என்னவோ? சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .. தரமான படங்களாக எடுங்கள்..மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள்..தியேட்டர் தருவார்கள். நான் வரி விலக்குக்காக பல படங்களை பார்த்திருக்கிறேன்..அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை…அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான்…அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்.

இந்த பத்திரிகைகாரங்க பாவம்…எவ்வளவு குப்பை படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து தண்டணையை அனுபவித்தே வருகிறார்கள்..படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே வந்து விடுகிறார். பத்திரிக்கையாளர்களும் இந்த சீனுக்கு அடுத்த சீனும் நல்லா இருக்கும் .பாராட்டி எழுதுவோமே என்று கடைசி வரை பார்த்து விடுகிறார்கள். பத்திரிக்கையாளர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது…

இவ்வாறு ஆர்.வி உதயகுமார் பேசினார்..

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close