breaking news New
Test Image

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் விமர்சனம்

மேற்கு தொடர்ச்சி மலை : சர்வதேச அளவில் பல விருதுகளை அல்லி குவித்த திரைப்படம் ஒரு வழியாக வெளியாகிவிட்டது.படத்தை தயாரித்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நம்மை கட்டி போட்டு விடுகிறார் இயக்குனர்.படத்தின் ஆரமபத்திலேயே நம்மை அவருடன் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பயணிக்க வைக்கிறார். சாதாரண எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.அவர்களுக்கு நடக்கும் துரோகத்தை இறுதி காட்சியில் இதை விட யாரும் வலிமையாக வைக்க முடியாது.தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இது திகழும் என்பதில் சந்தேகம் இல்லை

படத்தின் நாயகர்கள் நாயகிகள் என்று யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. ரங்கசாமி,சாக்கு , என்று கதாபாத்திரங்களாகவே மனதில் பதிந்து விடுகிறார்கள்.படத்தின் அணைத்து நடிகர்களும் நடித்தார்களா என்ற சந்தேகம் எழும். அந்த அளவுக்கு நடிப்பே தெரியாத அளவிற்கு அப்படியொரு எதார்த்தம்.படத்தின் மிகப்பெரிய தூண் படத்தின் ஒளிப்பதிவு தான்.மேற்கு தொடர்ச்சி மழைக்கு சென்று வந்த ஒரு உணர்வை தன ஒளிப்பதிவின் ஏற்படுத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்.அவருக்கு விருதுகள் நிச்சயம் காத்திருக்கிறது.படத்தின் பின்னணி இசை சற்று கைகொடுத்திருக்கிறது.படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தமிழ் சினிமாவின் எதார்த்த இயக்குனர்களில் முக்கியமான ஒருவராக திகழ போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கு தொடர்ச்சி மலை : ஒரு முறையாவது பயணித்து பாருங்கள் வாழ்க்கையில்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password