breaking news New
Test Image

விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த ஆஞ்சநேயா, சூர்யாவின் பிதாமகன் படங்கள் ரிலீஸ்.

இந்தாண்டு தீபாவளிக்கு விஜய், அஜித், சூர்யா படங்கள் வெளியாக இருப்பதாக ஏற்கனவே நாம் கூறியிருந்தாம். அது இப்போது உறுதியாகி உள்ளது. விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமா அறிவித்துள்ளது அப்படத்தை தயாரிக்கும் – சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்.

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும், புதிய படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என அதை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்தநிலையில, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் ‘ஹேப்பி தீபாவளி…’ என டுவீட் செய்திருந்தார் முருகதாஸ்.

அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்கள் நடித்த படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானால் மிகப்பெரிய அதிசயம் தான். 2001ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய், சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படமும், அஜித் நடித்த ‘தீனா’ படமும் ரிலீஸாகின.

2003-ல் விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த ஆஞ்சநேயா, சூர்யாவின் பிதாமகன் படங்கள் ரிலீஸ் ஆகின.

இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் மூன்று பெரிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை, காரணம் போதிய தியேட்டர் கிடைக்காது, வசூல் பாதிக்கப்படும். இதையெல்லாம் மீறி மூன்று படங்கள் வெளியானால் நிச்சயம் அதிசயம் தான்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password