சினிமா செய்திகள்

100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா !

மகளிர் தினத்தை முன்னிட்டு

மகளிர் தினத்தை முன்னிட்டு 100 மகளிருக்கு வேலூர் தளபதி  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா !
 
விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் .

 
தளபதி  விஜய்  அவர்களின் வாழ்த்துகளுடன்  மகளிர்  தினத்தை கொண்டாடும்  அனைத்து  மகளிர்களுக்கும், சகோதரிகளுக்கும்  தாய்மார்களுக்கும் , இனிய  மகளிர்  தின நாளில்  வேலூர் மாவட்ட தலைமை மக்கள் இயக்கம் சார்பாக , வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.வேல்முருகன் அவர்கள் தலைமையிலும், வேலூர் மாவட்ட இளைஞரனி தலைவர் A.நவீன் அவர்கள் முன்னிலையிலும் தோட்டப்பாளையம் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
 

 

இதில்  நூற்றுக்கும்   மேற்பட்ட மகளிருக்கு இலவச புடவைகள் மற்றும் குடங்கள் , இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது.
 
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட செயலாளர் K.கருணாரன், மாவட்ட பொருளாளர் M.சீனிவாசன்,வேலூர் மாவட்ட துணை செயலாளர் P.V.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் சரத், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரனி துணை செயலாளர் பரத், மாவட்ட பிரதிநிதி தமிழ், வேலூர் மாநகர தலைவர் சாரங்கன், வாலாஜா நகர தலைவர் மோகன், ஆற்காடு நகர தலைவர் வினோத், வேலூர் மாநகர மாணவரனி தலை
வர் பாரத், காட்பாடி ஒன்றிய தலைவி தாஹிரா பானு,  மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close