breaking news New
Test Image

96 திரைப்படம் விமர்சனம் – Fulloncinema

96 : நம்முடைய வாழ்க்கையில் கடந்து வந்த முதல் காதலை நினைவுபடுத்தும் அழகிய காதல் காவியம் தான் இந்த 96 திரைப்படம்.படத்தின் கதைப்படி 96வது ஆண்டில் தஞ்சாவூரில் ஒரு பள்ளியில்  படித்த மாணவர்கள் அனைவரும் 20 வருடங்கள் கழித்து ஒன்று கூடுகின்றனர் ஒரு அழகிய இரவில்,அந்த பள்ளியில் படித்த காதல் ஜோடிகள் விஜய் சேதுபதியும்,த்ரிஷாவும் மீண்டும் சந்தித்து கொள்ளும்பொழுது நடக்கும் அழகிய காதல் கவிதையான தருணங்கள் தான் இந்த படத்தின் கதை.ஆனால் அதை இதைவிட ஒரு அழகான காதல் கவிதையாக யாரும் தந்து விட முடியாது என்றே சொல்லலாம்.படத்தை பார்க்கும் ஒவ்வுருவரும் தங்களை அந்த கதாபாத்திரங்களோடு பொருத்தி பார்ப்பதே இந்த படத்தின் வெற்றி என்றே கூறலாம்.

படத்தின் உயிர்நாடியாக விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் ,ராமசந்திரன் மற்றும் ஜானு வாக வாழ்திருக்கிறார்கள்.படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இளம்வயது காதலர்களாக ஆதித்ய பாஸ்கரும்,கௌரியும் நடித்திருக்கிறார்கள்.இவர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.படத்தின் முகம் தெரியாத ஹீரோ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த.பாடல் காட்சிகளில் அத்தனை உயிர்ப்பு உள்ளது.படத்தின் அறிமுக இயக்குனர் பிரேம்குமாரை என்னவென்று பாராட்டுவது தெரியவில்லை.படத்திற்கு உயிர்கொடுத்து உழைத்திருக்கிறார்,அதற்கான பலன் கண்டிப்பாக அவருக்கு கிடைக்கும் என்று நம்பலாம்.

96 : முடிந்தால் ஒரு முறையாவது பாருங்கள்.

Test Image
<

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password