சினிமா செய்திகள்செய்திகள்

Anand shankar Weds Divyanka !

உதவி இயக்குனராக சினிமாவில் கால்பதித்து  இன்று இயக்குனராக வலம் வருபவர் ஆனந்த் ஷங்கர் . இவர் ரன்பீர் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ” அஞ்சனா அஞ்சனி” என்ற இந்தி படத்தில் சித்தார்த் ஆனந்த் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.  பின் தமிழில் ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ மற்றும் ‘7ஆம் அறிவு‘ படத்திலும் co -director ஆகா பணியாற்றியுள்ளார்.  2014ல் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘ அரிமா நம்பி‘ எனும் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

இந்த படம் மக்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.  இந்த வெற்றியை அடுத்து இவர் சியான் விக்ரம் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து 2016ஆம் ஆண்டில் இருமுகன் எனும் படத்தை இயக்கினார் .விக்ரம் நயன்தாரா இணைந்து நடித்த முதல் படம் இது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளியதுடன் மக்களின் நல்ல விமர்சனங்களையும் பெற்று சாதனை படைத்தது.

பின்னர், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் சென்சேஷ்னல் ஹீரோவான விஜய் தேவர்கொண்டாவை வைத்து தமிழில் அரசியல் கதைகளத்தின் பின்னனியில் இவர் எடுத்த படம் ‘நோட்டா ‘.விஜய் தேவர்கொண்டா தமிழில் அறிமுகமாகிய முதல் படம் இது.

11 .7 .2019 அன்று  திவ்யங்கா என்பவருடன் இவருக்கு திருமணம் சென்னை ஐ.சி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.  இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் ,உறவினர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close