விமர்சனம்

Boomerang – திரைப்படம் விமர்சனம்

பூமராங் _ நடிகர் அதர்வா மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இனைந்து நடித்து இயக்குனர் R .கண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் படம். ஒரு விபத்தில் தனது முகம் முழுவதும் சிதைந்து விட மரண படுக்கையில் இருக்கும் மூளை சாவு அடைந்த அதர்வாவின் முகத்தை இவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.பின்பு புதிய முகம் கிடைத்த இந்த புதிய அதர்வாவை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்கும் இந்த புதிய அதர்வா தன்னுடைய முகத்துக்கு சொந்தமானவரின் பிரச்னையை கண்டுபிடிக்க திருச்சி செல்கிறார்.அங்கு அவருக்கு நாடாகும் பிரச்னையும் கண்டு பிடிக்கும் உண்மையும் தான் படத்தின் கதை.

படத்தில் இரு வேறு பரிணாமத்தில் அதர்வா கனகச்சிதமாக பொருந்துகிறார். தேவையான இடங்களில் கதைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார்.நடிகை மேகா ஆகாஷ் அழகு பொம்மையாக தெரிகிறார். R .ஜே .பாலாஜி வரும் காட்சிகள் படத்திற்கு பிளஸ்,சதீஷின் காமெடி படத்திற்கு மைனஸ்.இந்துஜா கதாபாத்திரத்தில் உயிரோட்டம்.படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டலாம்.படத்தின் முதல் பாதி வேகமாகவும்,பிற்பகுதி மெதுவாகவும் பயணிக்கிறது.விவசாயம் மற்றும் நதி நீர் இணைப்பு பற்றியும் சமகால அரசியல் நிகழ்வுகளை வசனங்களில் பேசியதற்காகவும் இயக்குனர் கண்ணனை பாராட்டியே ஆகா வேண்டும்.

பூமராங் – சிந்திக்க வைக்க கூடிய படம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close