விமர்சனம்

DhaDha 87 – திரைப்படம் விமர்சனம்

தாதா 87 – வித்தியாசமான தலைப்பு மற்றும் கதையுடன் வெளிவந்திருக்கும் படம்.படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். படத்தின் கதை வடசென்னையில் நடக்கும் அரசியலையும் அதற்கு பலிக்கடாவாக்க நினைக்கும் ஒரு இளைஞரையும், அந்த இளைஞரின் காதலையும் அந்த ஏரியாவில் யாரும் தொட முடியாத ஒரு வயதான தாதா வாக வலம் வரும் சாருஹாசனையும் அவரது முதுமை பருவ காதலையும் சொல்கிறது இப்படம். படம் முழுக்க இப்படி பல சுவாரிஸ்யங்கள் உள்ளன.

படத்தில் வயதான தாதாவாக நடித்திருக்கும் சாருஹாசன் தாதா கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார்.அவருக்கு ஜோடியாக வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டியும் அற்புதம்.படத்தின் உண்மையான கதாநாயகன் என்று நாயகி ஸ்ரீ பல்லவியை தான் கூறவேண்டும். மிக போல்டனா ஒரு கதாபாத்திரம் அவருக்கு. படத்தில் அரசியல் மட்டும் அல்லாமல் திருநங்கைகளின் வாழ்க்கை வலியையும்,அவர்களின் காதல் உணர்வை சொன்னதற்கு இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் படத்தில் தாதா கதாபாத்திரத்தின் காட்சிகள் குறைவாக இருப்பது படத்தின் மைனஸ்.நாயகியின் அப்பாவாக ஜனகராஜ் அசத்துகிறார்,அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

தாதா 87 – புதிய முயற்சி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close