விமர்சனம்

GameOver – திரைப்படம் விமர்சனம்

Gameover – மாயா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் தான் Gameover. படத்தின் கதை தன் கடந்த கால நிகழ்வுகளால் ஒரு வருடம் கழித்து மீண்டும் பாதிக்கப்படுகிறார் டாப்ஸீ. இது ஒருபுறம் இருக்க இளம்பெண்களை கொலை செய்து ரசிக்கும் மர்ம மனிதன் ஊருக்குள் வலம் வருகிறான்.தன் நினைவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் டாப்ஸீ அதிலிருந்து வெளிவரமுடியாமல் தற்கொலைக்கு முயல்கிறார்,அதில் மீண்டு தன்னுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து விடுகிறது.இந்நிலையில் அந்த மர்ம மனிதன் டாப்ஸீ வீட்டுக்குள் புகுந்து விடுகிறான் பிறகு டாப்ஸீ அந்த பயத்தில் இருந்து வெளிவந்தரா,மர்ம மனிதனை கொன்றாரா என்பது த்ரில்லிங் ஆனா இறுதி காட்சி.

படத்தில் நாயகன் யாரும் இல்லை அனால் நாயகி டாப்ஸீ தன்னுடைய நடிப்பால் ஒட்டு மொத படத்தையும் தாங்கி நிற்கிறார். அவரின் நடிப்பு படத்திற்கு அரணாக உள்ளது.இரண்டாவது ஹீரோ படத்தின் பின்னணி இசை படத்தோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறது.படத்தில் பாடல்கள் மற்றும் தேவையில்லாமல் எந்த காட்சியும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம்.படத்தில் நாயகிக்கும் மர்ம மனிதனுக்கும் நடக்கும் உயிர் போராட்டம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. படத்தின் இயக்குனர் அஸ்வின் தன்னுடைய எழுத்தாலும்,இயக்கத்தாலும் ஒரு நேர்த்தியான தரமான திரில்லர் படத்தை தந்துள்ளார்.

Gameover – மரண பயம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close