விமர்சனம்

Kanne Kalaimaane – திரைப்படம் விமர்சனம்

கண்ணே கலைமானே – வாழ்வியல் சார்ந்த எளிய படைப்புகளை தரும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் மற்றுமொரு கிராம வாழ்வியல் சார்ந்த எதார்த்த படைப்பு. படத்தின் கரு இயற்கை விவசாயியான நாயகன் உதயநிதி ஸ்டாலின் மதுரை கிராம வங்கி மேலாளரான தமன்னாவை காதலித்து கரம்பிடிக்கிறார்.பிறகு அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது அது என்ன என்பது மீதி கதை. ஆனால் படம் பல விஷயங்களை மிக எளிதாக பேசுகிறது.அன்பையும்,இயற்கை விவசாயத்தையும்,கிராமங்களில் வாங்கப்படும் கடன்களையும் அதை மீட்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளையும் என்று பல விஷயங்கள் பேசுகிறது.

இயற்கை விவசாயியாக உதயநிதி ஸ்டாலின் வாழ்ந்திருக்கிறார்.அவருடைய வாழ்க்கையில் ஒரு மிக சிறந்த படம் இது. தமன்னாவும் தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.அவருக்கும் அவருடைய கேரியரில் இது மிக சிறந்த படமாக இருக்கும்.படத்தில் உதயநிதி அப்பாவாக நடித்திருக்கும் நபர் நன்றாக நடித்திருக்கிறார். வடிவுக்கரசி வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு. படத்தின் ஒளிப்பதிவும்,எடிட்டிங்கும் பலம். யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி தனக்கு தெரிந்த வாழ்ந்த வாழ்வியலை படமாக கொடுப்பதில் எப்போதுமே குறை வைத்தது இல்லை.

கண்ணே கலைமானே ; கவிதையான படைப்பு 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close