விமர்சனம்

LKG – திரைப்படம் விமர்சனம்

LKG – ஆர் .ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம்.படத்தின் திரைக்கதை,வசனம் ,கதை எல்லாம் ஆர் ஜே பாலாஜியே எழுதிவிட்டார். படத்தின் கதை லால்குடியில் வார்டு கவுன்சிலர் ஆக இருக்கும் ஆர் ஜே பாலாஜி பல வருடங்களாக அரசியலில் முகம் தெரியாத அரசியல்வாதியாக இருக்கும் தனது தந்தை போல் இருந்துவிட கூடாது என்பதற்காக முதலமைச்சர் பதவியை அவர் பிடிக்க எடுக்கும் முயற்சியே இந்த LKG .படத்தின் மொத்த கதையும் தற்காலிக அரசியலை குறிவைத்து தாக்குகிறது.

ஆர் ஜே பாலாஜி இந்த காமெடி கலந்த அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்,இறுதி காட்சியில் அவர் பேசும் வசனங்கள் பெரிய நடிகர்கள் கூட பேச தயங்குவார்கள்.படத்தில் ஜே.கே.ரித்தீஷ் மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோரின் நடிப்பு ஆச்சரிய பட வைக்கிறது. பிரியா ஆனந்த் காட்சிக்கு காட்சி அழகாக பளிச்சிடுகிறார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்கள்.படத்தின் இயக்குனர் வேலையை மட்டும் பார்த்திருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.பிரபு சிறப்பாகவே இயக்கிருக்கிறார்.தற்போதுள்ள ட்ரெண்டிங் விஷயங்களை சொன்னதால் தனித்து நிற்கிறது படம்.

LKG  – தைரியமான படைப்பு  

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close