விமர்சனம்

Monster – திரைப்படம் விமர்சனம்

மான்ஸ்டர் – நடிகர் இயக்குனர் sj சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு கோடை திரைப்படம் இந்த மான்ஸ்டர்.படத்தின் கதை,என்ஜினீயர் ஆன sj சூர்யா அரசு வேலையில் பணி புரிகிறார்.தன்னுடைய ஆசை கனவாக ஒரு வீட்டை அடுக்கு மாடி குடியிருப்பில் வாங்குகிறார்.அந்த வீட்டில் நிம்மதியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் அவர் பின்பு அந்த வீட்டில் சுற்றி திரியும் ஒரு எலியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்.அந்த எலியை கொல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் sj சூர்யா வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் கதை.

படத்தின் உண்மையான கதாநாயகன் அந்த எலி என்றே கூறலாம்,ஒவ்வொரு முறையும் தனக்கு வைத்த பொறியில் சிக்கி கொள்ளாமல் தப்பிக்கும் இடங்களில் கைதட்டல் வாங்குகிறது எலி.படத்தின் மற்றோரு ஹீரோ sj சூர்யா மனிதன் நடிப்பில் பின்னி இருக்கிறார்,எலியிடம் மாட்டி கொண்டு இவர் தவிக்கும் காட்சிகள் சிரிப்பு மழை. பிரியா பவானி சங்கர் மற்றும் கருணாகரன் கதையின் ஓட்டத்துக்கு கை கொடுக்கிறார்கள்.படத்தின் இசை மற்றும் பாடல்கள் சிறப்பு.படத்தின் ஒளிப்பதிவு காட்சிக்கு உயிரோட்டம் தருகிறது. இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வித்தியாசனமான ஒரு கதையை எடுத்து அதை காட்சி படுத்தியதிலும் வெற்றி பெறுகிறார். படத்தின் நீளம் மைனஸ்.

Monster – குழந்தைகளோடு கண்டு மகிழலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close