விமர்சனம்

Nedunalvaadai – திரைப்படம் விமர்சனம்

நெடுநல்வாடை – முற்றிலும் புதுமுகங்கள் கொடுத்திருக்கும் ஒரு தரமான தமிழ்ப்படம் நெடுநல்வாடை. சிறு வயதிலே அம்மாவுடன் வாழாவெட்டியாக தனது தாத்தா ஊரில் தஞ்சம் ஆடையும் நாயகன்.தன் தங்கை குடும்பத்தை வெறுக்கும் தாய்மாமன்,ஊரே எதிர்த்தாலும் தனது மகளின் குடும்பத்தை காக்கும் அரனாய் பூ ராமு,சிறு வயதில் மலரும் மொட்டு காதல் பருவ காதலாக மலருகிறது.தனது இறப்புக்கு முன்னால் தன மகளின் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர ஆசைப்படுகிறார் பூ ராமு.காதலுக்கும் குடும்பத்துக்கும் நடுவில் தவிக்கும் இளைஞனின் தவிப்பை நெல்லை வாசத்தோடு வீசுகிறது படம்.

படத்தின் கதாநாயகன்,படத்தின் தூண் எல்லாமே பூ ராமு தான்.படத்தை முழுவதையும் தன தோளில் சுமந்து நிற்கிறார்.அவருக்கு விருதுகள் நிச்சயம்.அடுத்ததாக கவனம் ஈர்ப்பவர் நாயகி அஞ்சலி நாயர் தன் கண்களிலேயே காதலை வெளிப்படுத்தி அசத்துகிறார்,நடிப்பிலும் மிக அருமை.நாயகன் தேர்வும் நன்றாக உள்ளது.படத்தின் ஒளிப்பதிவும்,எடிட்டிங்கும் பிரமாதம்.படத்தின் பாடல்களும் அருமை குறிப்பாக கருவதேவா பாடல்.படத்தின் இயக்குனர் செல்வக்கண்ணன் உண்மையிலேயே ஒரு சிறந்த படைப்பாக தனது முதல் படைப்பாக தந்திருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

நெடுநல்வாடை – அவசியம் பார்க்கவும் 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close