விமர்சனம்

Perazhagi ISO – திரைப்படம் விமர்சனம்

பேரழகி ISO – ஒரு சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய படம் தான்,இருந்தாலும் படம் பேசும் கதை பெரிது. பழங்காலத்தில் தொலைந்துவிடும் இளமையை திரும்ப பெரும் குறிப்புக்கள் இப்போதுள்ள ஒரு அறிவியல் ஆய்வாளர்களிடம் கிடைக்கிறது.அதை அவர்கள் ஒரு பாட்டியின் மேல் பயன்படுத்தி சோதிக்கிறார்கள்,முயற்சியில் வெற்றியும் கிடைக்கிறது. பாட்டி குமரி ஆகிறார்,பின்பு அவர் செய்யும் அலப்பறைகளும்,திரும்பவும் அவர் பழைய நிலையை அடைந்தாரா இல்லையா என்பது தான் கதை.

பாட்டியாக நடித்திருக்கும் நடிகை சச்சு நடிப்பில் முதிர்ச்சி அசத்துகிறார்.மாற்றொரு நாயகி ஷில்பா மஞ்சுநாத் இருவேறு கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டி நன்றாக நடித்திருக்கிறார்.படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதம். படத்தின் ஒளிப்பதிவும்,இசையும் சற்று கவனித்து இருக்கலாம்.படத்தில் சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான கதையை எடுத்ததற்கும் அதை படமாக்கிய விதத்திற்கும் இயக்குனரை பாராட்டலாம்.

பேரழகி ISO – சென்று பார்க்கலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close