விமர்சனம்

Sagaa – திரைப்படம் விமர்சனம்

சகா  : முழுக்க முழுக்க பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் சிறிய நடிகர்களை மட்டுமே வைத்து எடுத்து இருக்கிறார்கள்.பசங்க படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் இருக்கிறார்கள்.படத்தின் நாயகன் சரண் தனது நண்பனுடன் சேர்ந்து ஒரு கொலை செய்ததால் சிறுவர் சீர்திருத்த சிறைக்கு வருகிறார்கள்.அங்கு அவர்கள் சந்திக்கும் பகை சரணின் உயிர்நண்பனை காவு வாங்க அதற்கு பழிவாங்க துடிக்கிறார் சரண் .இதனிடையே காதலிக்காக திருடி விட்டு சிறைக்கு வந்த கிஷோருடன் நட்பாகி இருவரும் தப்பி சென்று அவரவர் காரியங்களை முடிக்க நினைக்கிறார்கள்.அவர்களின் ஆசை நிறைவேறியதா இல்லையா? என்பது மீதி கதை.

படத்தின் நாயகன் சரண் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.ஹீரோவுக்கான அத்தனை அம்ஸங்களும் இவரிடத்தில் உள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் கிஷோர்,பாண்டி ,ஸ்ரீ ராம், ஆய்ரா போன்றோரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். படத்தின் வில்லனாக தீணா மற்றும் ப்ரித்வி மிரட்டுகிறார்கள். படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளது,பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.படத்தின் நீளம் குறைவாக இருப்பது பலம். இயக்குனர் தனது முதல் படத்தில் தனது முத்திரையை சற்று ஆழம் குறைவாகவே பதித்த இருக்கிறார்.

சகா : வரவேற்கலாம் 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close