விமர்சனம்

Sarvam Thaala Mayam – திரைவிமர்சனம்

சர்வம் தாள மயம் : படத்தின் பெயரே இசையை பற்றிய படம் என்பதை கூறிவிடுகிறது.படத்தின் கதை பீட்டர் ஜான்சன் என்ற இளைஞன் கர்னாடக இசையான மிருதங்கத்தை கற்று அதில் சாதிக்க நினைக்கும் அவனிடம் இந்த சமூகம் அதை செய்ய விட்டதா இல்லையா ? என்பது தான்.கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து படம் இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன் தனது முத்திரையை ஆழமாக பதிகிறார். மனிதனுக்கு தான் ஜாதி மதம் எல்லாம் ஆனால் இசைக்கும் அது பொருந்துமா என ஆழமாக அலசுகிறது படம்.

படத்தின் நாயகன் gv பிரகாஷ் இவர் இசை கலைஞர் என்பதாலோ என்னவோ மனிதன் பீட்டர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.அவருக்கு இணையாக நெடுமுடி வேணு மற்றும் குமரவேல் நடிப்பில் அசதி உள்ளனர்.குறிப்பாக இருவரின் நடிப்பும் வெவ்வேறு தளங்களை கண்முன் நிறுத்துகிறது. படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் கச்சிதமாக உள்ளது. ARR இன் இசை மற்றும் பின்னணி இசை படத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்கிறது.படத்தின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி கர்நாடக இசையின் தாக்கத்தை இவ்வளவு அழகாக கையாண்டதிற்கு ராஜிவ் மேனனை பாராட்டலாம்.

சர்வம் தாள மயம் : அருமை 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close