விமர்சனம்

Thadam – திரைப்படம் விமர்சனம்

தடம் : இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் வந்திருக்கும் மூன்றாவது படம். படத்தின் கதைப்படி படத்தில் இரண்டு அருண் விஜய் இருவரும் வெவ்வேறு வாழ்க்கை முறையில் வாழ்கின்றனர். ஒரு அருண் விஜய் நல்ல வேலை கிடைத்து கதாநாயகியை காதலித்து கொண்டும் இருக்கிறார். மற்றோரு அருண் விஜய் மற்றவர்களை ஏமாற்றி ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு அருண் விஜய் ஒருவரை கொலை செய்கிறார்.பின்பு இரண்டு அருண் விஜயும் போலீசிடம் மாட்டி கொள்ள அவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று கண்டுபிடிக்க போலீஸ் படும் பாடு தான் மீதி கதை.

படத்தில் இரண்டு அருண் விஜய் இரண்டு கதாபாத்திரத்தையும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் அழகாக வித்தியாச படுத்தி காட்டுகிறார் நாயகன் அருண் விஜய். படத்தில் அருண் விஜய் மற்றும்  கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் நிற்கும் படி உள்ளன.படத்தில் யோகி பாபுவின் காமெடி மிஸ்ஸிங். மற்றபடி தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படத்திற்கு வலு சேர்கிறது.படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிய பலம். இயக்குனர் மகிழ் திருமேனி இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து அந்த திரைக்கதையை சுவாரிஸ்யமாக கொடுப்பதில் வல்லவர் என்பதை மற்றோரு முறை நிரூபித்து இருக்கிறார்.

தடம் – தடத்தை நன்றாக அழுத்தி பதித்து இருக்கிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close