விமர்சனம்

Thirumanam – திரைப்படம் விமர்சனம்

திருமணம் : இயக்குனர் சேரன் வெகு நாட்கள் கழித்து இயக்கி இருக்கும் ஒரு படம் அல்ல பாடம். படத்தின் கதை, வருமான துறையில் வேலை பார்க்கும் சேரன் தனது தங்கை காதலிக்கும் நாயகன் உமாபதியுடன் கல்யாணம் செய்து வைக்க முடிவு எடுக்கிறார். உமாபதியின் அக்கா சுகன்யா ஜம்மென் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரண்டு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். பின்பு திருமணம் ஏற்பாடுகள் நடக்கும் போது திருமணத்திற்கான ஆடம்பர செலவுகளை ஆட்சேபிக்கும் சேரனுக்கும், தனது தம்பிக்கு ஆடம்பர கல்யாணம் செய்ய நினைக்கும் சுகன்யாவுக்கும் முட்டி கொள்ள இந்த திருமணம் நின்று விடுகிறது. பின்பு அவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்ததா இல்லையா என்பது தான் கதை.

இயக்குனர் சேரன் அவர்கள் தனது வழக்கமான எதார்த்த நடிப்பின் மூலம் கவர்கிறார்.சுகன்யாவும் தனது பங்குக்கு கவனம் ஈர்க்கிறார்.நாயகன் உமாபதி அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.படத்தின் தூண்கள் M.S.பாஸ்கரும்,தம்பி ராமையாவும் தான் என்று சொல்லலாம்.இருவரும் பேசி கொள்ளும் ஒரு பத்து நிமிட காட்சி அவர்களின் நடிப்பை பறைசாற்றும். படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.கல்யாணத்திற்காக வீணாக செய்யப்படும் ஆடம்பர செலவுகளையும்,அதற்கு பிறகு அந்த குடும்பம் எப்படி கடனில் சிக்கி தவிக்கிறது என்பதை எதார்த்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர் சேரன்.

திருமணம் : சபாஷ் 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close