விமர்சனம்

Uriyadi 2 – திரைப்படம் விமர்சனம்

உறியடி 2 – உறியடி முதல் பாகத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கிருக்கிறார் விஜய் குமார் மற்றும் தயாரித்திருக்கிறார் நடிகர் சூர்யா.படத்தின் மைய கரு செங்கதிர் கிராமத்தில் முறையான பராமரிப்பின்றி அரசு அதிகாரிகளை தன் கைக்குள் வைத்து கொண்டு ரசாயன தொழிற்சாலை நடத்துகிறார் தொழிலதிபர் ராஜ் பிரகாஷ்.அங்கு வேலை செய்யும் நாயகன் விஜய் குமார் ஒரு கட்டத்தில் அந்த தொழிற்சாலையில் ஏற்படும் விபத்தால் வெளியேறும் நச்சு புகை செங்கதிர் கிராம மக்களின் பல பேரின் உயிர்களை காவு வாங்குகிறது.இதற்கு எப்படி நாயகன் நியாயம் தேடினார் என்பது மீதி கதை.

தமிழ் சினிமாவில் தரமான படங்களில் இதுவும் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் விஜய் குமார் பல அரசியல் வாதிகளுக்கு இந்த படத்தின் மூலம் பாடம் நடத்தி இருக்கிறார். சமூகத்தின் மீது அவரின் பார்வையை மக்களின் வலியை இந்த  படத்தின் மூலம் நம்முள் கடத்துகிறார்.படத்தின் மற்றோரு நாயகன் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த குறிப்பாக இடைவேளையில் மனிதனின் பின்னணி இசை உலக தரத்திற்கு அமைந்துள்ளது.இடைவேளை பகுதி இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு காட்சியமைப்பு.படத்தின் குழுவிற்கு ஒரு சல்யூட்.

உறியடி 2 – அவசியம் பார்க்கவும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close